‘ஊமை விழிகள் பார்ட் 2’ – AI மூலம் உயிர் பெறும் விஜயகாந்த்..! ரசிகர்கள் உற்சாகம்..!

0
77

Oomai vizhigal Part 2: உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் ஆபாவாணன் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து ‘ஊமை விழிகள் பார்ட் 2’ படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஊமை விழிகள்’ திரைப்படமானது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு செய்தவர் ஆபாவாணன். இவர், திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், தனது சக மாணவர்களை வைத்து இந்த படத்தை எடுத்தார்.

இதில், கேப்டன் விஜயகாந்த் DSP தீனதயாளன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும், அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.

திகில் கலந்த படமான ‘ஊமை விழிகள்’ திரையரங்குகளில் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் வரும் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற சோகப் பாடம் மிகப்பெரிய புகழ்பெற்றது. இந்த படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.

முன்பெல்லாம் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்று சொன்னாலே மேலையும், கீழையுமாக பார்ப்பதும், அவர்களுக்கு திரைத்துறையில் சரியான வரவேற்பு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். அந்த நேரத்தில் தான் முதன் முதலாக கேப்டன் விஜயகாந்த் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது திறமைகளையும் வெளிக்கொணர உதவினார்.

அதனைத் தொடர்ந்து தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு திரைத்துறையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த்தின் மறைவையொட்டி ஆபாவாணான் திரைப்படக் கல்லூரிக்குச் சென்று கேப்டன் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

பின்னர், அங்கு பேசுகையில், தான் ‘ஊமை விழிகள் பார்ட் 2’ எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார். விஜயகாந்த் இல்லாமல் ‘ஊமை விழிகள் பார்ட் 2’ எப்படி எடுக்க முடியும் என அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI – Artificial intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த்தின் உருவாத்தைக் கொண்டுவந்து இந்தப் படத்தை எடுக்கப் போவதாக கூறியிருப்பதாக தெரிகிறது.

இதனைக் கேட்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த தகவல் வெளியான நிலையில் விஜயகாந்த் ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். மேலும், இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த தகவலால், மறைந்த தங்களது தலைவனை மீண்டும் திரையரங்குகளில் பார்க்கப்போகிற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: ‘சினிமா விருதுகளில் இனி கேப்டன் பெயரிலும் விருது’ – அரசுக்கு கோரிக்கை வைத்த திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here