‘Oru Nodi’: அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஒரு நொடி’. இந்த படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ளது.
மேலும், இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் இசை அமைக்கிறார்.
இந்த படம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதையாகும். ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு மர்ம முடிச்சுகள் இந்த படத்தில் இருப்பதாக இயக்குநர் மணிவர்மன் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ‘ஒரு நொடி’ படத்தின் பர்ஸ் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். தொடர்ந்து, அந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தனது.
இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஒரு நொடி’ படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் ப்ரோமோ வெளியாகவுள்ளது.
அந்த ப்ரோமோவை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நாளை (பிப்.21) மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.