மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் படம் தான் ‘ஒரு நொடி’ – இயக்குநர் மணிவர்மன்!

0
64

‘Oru Nodi’: அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஒரு நொடி’. இந்த படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும், இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் இசை அமைக்கிறார்.

இந்த நிலையில், இந்த படம் குறித்து இயக்குநர் மணிவர்மன் கூறும்போது, “இந்த படம் ஒரு திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதையாகும். ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு மர்ம முடிச்சுகள் படத்தில் இருக்கிறது.

இதுதான் இந்த படத்திற்கு இன்னொரு பலமாக அமைந்துள்ளது. படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ‘ஒரு நொடி’ படம் விரைவில் வெளிவரும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here