‘நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள்’ – அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய ஓவியா..!

0
128

தமிழ் சினிமாவில் ‘களவாணி’, ‘மெரினா’, ‘மதயானை கூட்டம்’, ‘கலகலப்பு’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார்.

தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்த கேள்விக்கு ஓவியா துணிச்சலாக பதில் கூறியுள்ளார்.

அந்த பேட்டில் அவர் பேசியதாவது, “சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை எப்போதுமே இருக்கிறது. ஆனால் இப்போதும் அது தொடர்வது வேதனையாக தான் உள்ளது. சினிமா இவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனாலும் இந்த பிரச்சினை மட்டும் ஓயவில்லை.

எல்லா இடத்திலும் பெண்களை அனுசரிக்க சொல்கிறார்கள். இதற்கு பெண்கள் அப்பொழுதே பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும். எதையும் மனதில் போட்டு குழப்பிக்காமல், உடனே அந்த பிரச்சினைக்கு ரியாக்ஷன் கொடுத்தால் பிரச்சினையே வராது.

எதுவாக இருந்தாலும், நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பண்ணவே கூடாது. அப்படி செய்து கிடைக்கும் பலன் தேவையே இல்லை. நிறைய பேர் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

சினிமா பாதுகாப்பான துறைதான். ஆனால் நாம் தைரியமாக இருக்க வேண்டும். நம்மை நாமேதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ‘நோ’ சொல்ல தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள். யாரும் நம்மை ஏமாற்றி விடக்கூடாது. ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: முன்னனி நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா..! செம்ம குஷியில் ரசிகர்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here