தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநரான பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அகிரன் மோசஸ். இவரது இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.
இந்த படத்தில், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஷ்வாந்த், ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ் என பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (பிப்.29) தொடங்கியது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார்.