வசூலை அள்ளிக் குவித்த அக்ஷய் குமார் படம்..! ஒரே நாளில் இத்தனை கோடி வசூல்..!

0
96

Bade Miyan Chote Miyan: இயக்குநர் அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கத்தில் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த படம் ‘படே மியன் சோட்டே மியன்’. இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா, ஆல்யா மற்றும் மனுஷி சில்லர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘படே மியன் சோட்டே மியன்’ படம் நேற்று (ஏப்ரல் 11) ரம்ஜானை முன்னிட்டு ரிலீஸானது.

மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் ஹிந்தியில் படம் ரிலீஸான அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் வேட்டை தொடங்கியுள்ளது. அதன்படி படம் ரிலீஸான ஒரே நாளில் இந்தியா முழுவதும் ரூ.15.62 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடிய விரைவில் ரூ100 கோடி வசூலைத் தொடும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here