மீண்டும் காதலுக்கான பயணத்தில் கார்த்தி..! ரீரிலீஸாகும் ‘பையா’..!

0
95

‘Paiya’ : இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடித்து 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘பையா’. டிராவலிங் திரில்லருடன் காதல் கதையாக உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்த படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது. இன்றளவும் ‘பையா’ பாடல்கள் அனைவரது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

‘பையா’ படம் ரிலீஸாகி 14 ஆண்டுகளான நிலையில் தற்போது மீண்டும் ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘பையா’ படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரீரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படம் ரிலீஸான 2010ஆம் ஆண்டு 90ஸ் கிட்ஸில் பலரும் பள்ளிக்கூடம் சென்றிருந்த நிலையில் தற்போது இந்த ரீரிலீஸால் 90ஸ் கிட்ஸ் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here