Parthiban: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வது, இரண்டாம் பாகங்களை எடுப்பது என போன்ற விஷயங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மருபுறம் ஹிட் படங்களை ரீரீலீஸ் செய்து அதன் மூலமும் வசூல் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ திரைப்படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், “என்னுடைய புதிய பாதை படத்தை ரீரிலீஸ் செய்யாமல், அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன்.
33 வருடங்கள் கழித்து நானே மீண்டும் ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளேன். அந்த படத்திற்கு ‘டார்க் வெப்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். என்னுடைய ‘டீன்ஸ்’ படம் வெளியானதற்கு பிறகு அந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.