ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு?.. ‘லால் சலாம்’ படத்திற்கு தடை?..

0
93

‘Lal Salaam’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் சமூக ஆர்வலர் ஆ.டி.ஐ. செல்வம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில், “லால் சலாம் படத்தில் நடித்துள்ள துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, ‘லால் சலாம்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, நிம்மதியாக வாழும் எங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ள லால் சலாம் படத்தின் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கு, ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘லால் சலாம்’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த திடீர் பிரச்சினை உருவாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here