பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாடு வந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் ஹெலிகாப்டரில் மூலம் புறப்பட்டு மாலை 5:15 மணியளவில் மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடக்கும் சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுடன் உரையாடினார்.
அதன்பிறகு இன்று இரவு வேட்டி, சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு மோடிக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
முன்னதாக பிரதமர் மோடி 2021ஆம் ஆண்டு மதுரை வந்திருந்தபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவர் சென்றிருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து இன்று இரவு மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பிறகு மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.