PM Modi: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார். தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் இறங்கினார்.
அங்கு, பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.