பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை..!

0
129

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்த நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறுகிறது.

இதற்காக, அண்ணாமலை இன்று காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறார். தொடர்ந்து, பல்லடம் மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மைதானத்துக்குச் சென்றடைகிறார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றுப் பேசுகிறார். இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 2.35 மணிக்கு பல்லடம் செல்கிறார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்ல இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அண்ணாமலையும் வாகனத்தில் ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்குச் செல்கின்றனர்.

இந்த பொதுக்கூட்டமானது இன்று மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரைக்கு செல்கிறார்.

தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார். இதன் காரணமாக இன்று இரவு மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பிறகு மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், 3 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதால் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here