சாகசப் பயணத்தில் வேதிகா – ஆட்டம்போட வைக்கும் ‘கஜானா’ பாடல் ரிலீஸ்..

0
128

Gajaana: இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘கஜானா’. இந்தப் படத்தில் சாந்தினி, யோகி பாபு, இனிகோ பிரபாகர், வேலு பிரபாகரன், பிரதாப் போத்தன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கஜானா படத்தில் விஎஃப்எக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது.

இந்த படம் முழுவதும் வேதிகாவின் கதாபாத்திரத்தை சுற்றியே நகரம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட புதையலைத் தேடி சாகசப் பயணம் மேற்கொள்ளும் படம் தான் ‘கஜானா’.

இந்த நிலையில், தற்போது ‘கஜானா’ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கஜானா’ படத்தின் ‘போலாம் போலாம்’ என்ற புதிய பாடல் இன்று (மார்ச்.31) வெளியானது.

இந்த பாடலை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டார். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here