இறந்துவிட்டதாக பொய் தகவல் பரப்பிய பூனம் பாண்டே.. 5 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு..!

0
83

Poonam Pandey: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நேற்றுமுன்தினம் (பிப்.2) உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலை பூனம் பாண்டேவின் மேலாளர் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று (பிப்.03) பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகை பூனம் பாண்டே “நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக ஏராளமான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதனை முற்றிலும் தடுக்க வேண்டிய நோயாகும்.

இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நோயால் இனி எந்த ஒரு பெண்ணும் உயிரிழக்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த பதிவில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பூனம் பாண்டே உயிரிழந்ததாக பரவிய தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டேதான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினார்.

இந்த நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், போலி செய்தியை பரப்பி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையெனில் பலரும் இதனை தவறான முன்னுதாரணமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளியில் பதக்கம் வென்ற தியா..! வைரலாகும் புகைப்படம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here