‘POR’: இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’. இந்தப் படம் இருமொழிப் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.
இந்த ‘போர்’ திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் வருகிற மார்ச் 1ஆம் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், ‘போர்’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘நண்பகல் நேரம்’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.