ட்ரெண்டாகும் ‘போர்’ படத்தின் டீசர்..!

0
175

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’. இந்தப் படம் இருமொழிப் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளனர்.

‘போர்’ திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here