‘மறக்குமா நெஞ்சம்’ படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்..!

0
90

‘Marakkuma Nenjam’: இயக்குநர் ராகோ. யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் டிவி தொகுப்பாளராக இருக்கும் ரக்‌ஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’. இந்த படத்தில் ரக்‌ஷனுடன் சேர்ந்து தீனாவும் நடித்திருக்கிறார்.

முன்னதாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரக்‌ஷனுக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற ஆண்டு மே மாதம் வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ட்ரெய்லர் மூலம் இப்படம் ஒரு பள்ளி வாழ்க்கைப் பற்றிய படம் என்பது தெரியவந்தது.

இந்தப் படத்தை ரகு எள்ளுரு தயாரித்துள்ளார். படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்திருக்கிறார் மற்றும் தாமரை பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், ‘மறக்குமா நெஞ்சம்’ படம் இன்று (பிப்.2) ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் சென்னை ரோஹினி திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் ரக்‌ஷன் நேரடியாக திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார்

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ரக்‌ஷனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘மறக்குமா நெஞ்சம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here