Kalki 2898 AD: பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.
இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
சமீபத்தில் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைதொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் கதாநாயகன் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயர் ‘பைரவா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் பிரபாஸ் மாஸ் லுக்கில் இருக்கிறார் அத்துடன் அவரது பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வருகிற மே மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.