சினிமாவுக்கு திடீர் பிரேக் எடுத்த பிரபாஸ்..! என்ன காரணம்..?

0
138

பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.

இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், தற்போது பிரபாஸ் உடல் நிலை குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரபாஸ் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாத நிலையில், அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், சில நாட்கள் ஓய்வெடுக்கும் முடிவில் பிரபாஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தனது உடற்தகுதியை மேம்படுத்தி தோற்றத்தை மாற்றவும் பிரபாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இதேபோல், நடிகை சமந்தாவும் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் நடிப்பதற்கு பிரேக் எடுத்திருந்த நிலையில் தற்போது பிரபாஸும் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக தெரிகிறது.

இதனையறிந்த பிரபாஸ் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இதுவரை பிரபாஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here