தனுஷுடன் இணையும் பிரபுதேவா.. காத்தவராயனின் ஆட்டம் எப்போ?..

0
138

‘Raayan’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் புகைப்படங்கள் வெளியானது. அதன்படி, இந்த படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘ராயன்’ படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது ‘ராயன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தயாராகி வருகிறது.

மே மாதம் இந்த பர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பர்ஸ்ட் சிங்கிளை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குநராக இணைந்துள்ளார்.

முன்னதாக ரவுடி பேபி பாடலுக்கு பிரபு தேவா கோரியோ செய்திருந்த நிலையில் தற்போது ராயன் படத்தில் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here