வாரிசுகளே சினிமாவில் ஜெயிக்க முடிகிறது – வெளிப்படையாக பேசிய பிரீத்தி ஜிந்தா.. 

0
56

Preity Zinta: பாலிவுட்டில் ‘தில் சே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர், 2016ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  

தற்போது ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்நிலையில், தற்போது உள்ள சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து பிரீத்தி ஜிந்தா கூறுகையில், “சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பாலிவுட் சினிமா சாதகமாக இல்லை. ஏற்கனவே சினிமாவில் இருப்பவர்களது வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அவர்கள் தான் சினிமாவில் வளர முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு திறமையானவர்கள் இருக்கின்றனர். 

ஆனால், அவர்கள் வாரிசு நடிகர்களை தாண்டி சினிமாவில் வெற்றிப் பெறுவது மிகவும் கஷ்டம். சினிமா வாரிசுகள் மட்டுமே இங்கு நிலைக்க முடியும். சினிமா பின்புலம் இல்லாதவர்கள் எப்போதும் ஒரு வித பயத்திலேயே தான் இருக்கின்றனர்” என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here