‘Premalatha Vijayakanth’: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒவ்வொரு நாளும் எத்தனையோ சாதனைகளை படைத்து வரும் பெண்களுக்கு மென்மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் உலக மகளிர் தின நாள் கொண்டாடப்படுகிறது.
அதோடு, பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை வாய்ப்பாக கருதி உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் நட்புணர்வோடு, நல்ல புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி.
தேமுதிக சார்பில் பெண்களுக்கும் கேப்டன் அவர்கள் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறார். இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் மகளிருக்கு சம உரிமைகள் வழங்கப்பட காரணமாக இருந்து வருகிறது. பெண்களை என்றைக்குமே தேசிய முற்போக்கு திராவிட கழகம் போற்றி, கெளரவித்துக் கொண்டே நான் இருக்கிறது.
கேப்டன் வழியில் அவருடைய அனைத்து விதமான உதவிகளையும், நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து வழங்கி பெண்களைப் போற்றி கௌரவிப்போம்.
இந்த நல்ல நாளில், கேப்டன் விஜய்காந்த் மீது அன்பு கொண்டுள்ள அனைத்து பெண்களும், எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ தேமுதிக சார்பில் எனது மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.