‘Premalu’: இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஷ்ணுவிஜய் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. உலக அளவில் இதுவரை இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் மோலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘பிரேமலு’ 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் மற்றும் ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
‘பிரேமலு’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் தெலுங்கு மொழியில் ‘டப்பிங்’ செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் மொழியிலும் ‘டப்பிங்’ செய்து வெளியாகவுள்ளது.
அதன்படி, ‘பிரேமலு’ திரைப்படம் வருகிற மார்ச் 15ஆம் தேதி தமிழில் ரிலீஸாகவுள்ளது. மேலும், இந்த படத்தை ‘ரெட் ஜெயண்ட்’ வெளியிடுவதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மலையாளத்தில் கிடைத்த வெற்றி தமிழிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.