‘PM Modi’: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு சென்று.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தற்போது பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். தொடர்ந்து, பல்லடத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா நடைபெறும் மாதப்பூருக்கு திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி சென்றுகொண்டிருக்கிறார்.
பிரதமரை வரவேற்க வாகனத்தின் இரண்டு பக்கமும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் முன் உரையாற்ற இருக்கிறார்.