‘அவங்க அப்பாதான் இதுக்கெல்லாம் காரணம்’.. நெப்போடிசத்துக்கு பதிலடி கொடுத்த பிருத்விராஜ்..

0
102

Prithivraj: இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவர் நடிகர் பிருத்விராஜ். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளைத்தையே வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கோட் லைஃப்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் வாரிசு என்பதால் தான் அவருக்கு படவாய்ப்புகள் வருவதாக பிருத்விராஜ் மீது விமர்சனங்கள் கிளம்பின. இது குறித்து பிருத்விராஜ் அளித்த பேட்டியில், “நானும், துல்கர் சல்மானும் வாரிசு நடிகர்கள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தார்.

எனது தந்தையை வைத்து எனக்கு முதல் படவாய்ப்பை கிடைத்தது. அப்போது எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் கூட எடுக்கவில்லை. ஆனால், சினிமா பின்னணி இல்லாதவர்கள் இந்தமாதிரி சுலபமாக சினிமாவில் நுழைய முடியாது.

நடிகரின் வாரிசு என்பதற்காக முதல் படத்தில் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு அடுத்து நான் உழைத்து தான் எல்லா வாய்ப்புகளையும் பெற்றேன். உழைத்தால்தான் நிலைக்க முடியும். அதைத் தான் நானும், துல்கர் சல்மானும் தற்போது செய்து வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here