Aadujeevitham: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
மேலும்,தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘காந்தாரா-ஏ லெஜண்ட் பாகம் 1’ அப்டேட்..! மங்களூரில் பிரம்மாண்ட செட் அமைக்கும் படக்குழு..!