‘இந்த படத்திற்காக 72 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தேன்’ – ஷாக் கொடுத்த பிருத்விராஜ்!

0
110

Prithviraj: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘நஜீப்’ எனும் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், படம் குறித்து நடிகர் பிருத்விராஜ் அளித்த நேர்காணலில்,“இந்த படத்தில் எனது உடல் எடையை குறைக்கவேண்டி இருந்தது. இதற்காக நான் 72 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தேன்.

இது சரியான முறையா? என எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இதை தவிர வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. படத்தில் வரும் அந்த காதாபாத்திரத்தை மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்பதற்கான நான் இதை செய்தேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here