அட்லிக்கே டஃப் கொடுக்கும் பிருத்விராஜ்.. ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு?.. ஆடிப்போன ரசிகர்கள்..

0
121

Prithviraj: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸானது. ஜவான் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் சாதனை படைத்தது.

இந்திய சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும் வகையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை செய்தது. இந்த படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கவுள்ளார். இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அட்லீ தனது படங்களுக்கு அதிக அளவில் பணம் செலவு செய்வார் என்ற பேச்சு உள்ளது.

இந்நிலையில், தற்போது அட்லீயை மிஞ்சும் அளவிற்கு நடிகர் பிருத்விராஜ் இயக்கவுள்ள புதிய படத்திற்கு செலவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் லூசிஃபர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தற்போது லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஒரு நாளுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருநாள் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி என்றால் முழு படத்திற்கு எத்தனை கோடி செலவாகும் என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here