லூசிஃபர் படத்தை இயக்கும் பிருத்விராஜ்.. அஜித் பட தயாரிப்பாளரால் சிக்கல் ஏற்படுமா?..

0
59

Prithviraj: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். முன்னதாக ‘லூசிஃப்ர்’ படத்தை இயக்கிய பிருத்விராஜுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது.

முதல் படத்திலேயே பெரும் சாதனையை படைத்தார். அந்த வகையில் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்களில் ஒன்று பிருத்விராஜ் இயக்கிய லூசிஃபர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா அளவில் இயக்கவுள்ளார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்த லூசிஃபர் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக தயாரிப்பில் இருக்கும் படங்களுக்கே செலவு செய்ய முடியவில்லை என தயாரிப்பாளர் கூறி வரும் நிலையில், அடுத்த படத்தை தயாரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பிருத்விராஜ் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் எனவும் நிதி நெருக்கடி காரணமாக படம் பாதியிலேயே நின்றுவிடும் என கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here