‘இருவர் வானம் வேறென்றாலும்’ – காதலனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பிரியா பவானி சங்கர்!

0
140

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடரில் நடித்து சினிமா துறையில் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். இவரும் அவருடன் படித்த ராஜவேல் என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று தனது காதலரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி பிரியா பவானி சங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பதிவிடுட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஆக, இவர்தான் அவர்… எனது சிறந்த நண்பர், நாங்கள் சிரிப்போம், சண்டை போடுவோம், அழுவோம். தவறான வரிகளை நம்பிக்கையுடன் அவர் சத்தமாகப் பாடுவார். எங்களுக்குள் ஏ முதல் இசட் வரை வேறுபாடு உண்டு.

நாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றாலும் எனக்குள் எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும், எளிமையாகவும் இருப்பார். அவருடன் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

அதே சமயம் அமைதியாக அமர்ந்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து எனது வலிகளைப் பற்றிப் பேசுவேன். இந்த வாழ்க்கையை கோடி மடங்கு ஆனந்தமாகக் கடக்க இவர் மட்டும் போதும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here