தமிழ் சினிமாவில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘உத்தரவு மஹாராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை பிரியங்கா திம்மேஷ். இந்த படத்தை தொடர்ந்து பிரியங்காவிற்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால், அவர் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பிச் சென்றார். தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் ‘சத்தம் இன்றி முத்தம் தா’ என்ற படத்தில் நடிக்கிறார்.
ராஜ் தேவ் இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஹரிஷ் பெரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூபின் இசை அமைக்கிறார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீகாந்த் இதுவரை நடிக்காத புதுவிதமான கதாபாத்திரத்தில், வித்தியாசமான அணுகு முறையில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.