‘சியான் 62’ படத்தில் துசாரா விஜயனை தேர்ந்தெடுத்தது ஏன்? – தயாரிப்பாளர் விளக்கம்..

0
126

‘Dushara Vijayan’: சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சியான் 62’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த நிலையில் மீண்டும் இவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்த ‘சியான் 62’ படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒரு வில்லன் தான் எஸ்.ஜே.சூர்யா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கண்ட ரசிகர்கள், ‘படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் கொடுத்தது போதும் எப்போது படத்தின் ஷூட்டிங் நடைபெறும். வேறு புதிய அப்டேட்டுகள் கொடுங்கள்’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனையறிந்த படக்குழு தற்போது ஒரு புதிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, ‘சியான் 62’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘சியான் 62’ படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்தது. இந்த நிலையில், தயாரிப்பாளர் ரியா ஷிபு, இந்த படத்தில் துசாரா விஜயனை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “படத்தில் நடிப்பவர்களை தேர்ந்தெடுப்பது இயக்குநர் அருண் குமார் தான். இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து அவர் ரொம்ப தெளிவாக இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகி புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார்.

இந்த கதாபாத்திரத்திற்கு துசாரா விஜயன் சரியாக இருப்பார் என நினைத்தோம், அதற்காக அவரை தேர்ந்தெடுத்தோம்” என்றார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here