‛புதுப்பேட்டை 2’ கன்பார்ம்..! செல்வராகவன் அறிவிப்பு..!

0
82

‘Pudhupettai 2’: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ‘புதுப்பேட்டை’. 2006ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், படம் வெளியான அந்த காலகட்டத்தில் இந்தப் படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், பின்னர் இந்த படத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகி படத்தை கொண்டாடினர்.

தொடர்ந்து சில வருடங்களாக புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாகும் என செல்வராகவன், தனுஷ் என இருவரும் கூறிவந்தனர். ஆனால், இது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று திடீரென செல்வராகவன் தனது ‘X’ தளத்தில் ‘இந்த வருடத்தில் புதுப்பேட்டை 2 உருவாகும் என நம்புகிறேன்’’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here