புஷ்பா 2- முக்கிய காட்சிகளை படமாக்க ஜப்பான் செல்லும் படக்குழு..!

0
67

‘Pushpa 2: The Rule’: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தின் வெற்றி உலக அளவில் இருந்து கிடைத்திருப்பதால், இந்த புஷாபா இரண்டாம் பாகமும் உலக அளவில் நடக்க கூடிய மாஃபியா குறித்து படமாக்கப்படுகிறது.

புஷ்பா முதல் பாகத்தின் கதை, இந்திய சந்தன மாஃபியா பகுதியில் மட்டுமே இருந்தது. ஆனால், புஷ்பா படத்திற்கு கிடைத்த வெற்றி, சர்வதேச அளவில் படம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அதன்படி புஷ்பா பாகம் இரண்டானது, உலக அளவில் அறியப்படும் சட்ட விரோதமான சிவப்பு மணல் வியாபாரம் குறித்து பேசவுள்ளது.

இந்தக் காட்சியை சரியாகச் சித்தரிக்க ஜப்பானில் முக்கியப் பகுதிகளில் படத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியின் காரணமாக படத்தின் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் ஒரு வித்தியாசமான மற்றும் பரபரப்பான பின்னணியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஆக்ஷனை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் நடிக்கும் தீவிரமான சண்டைக் காட்சிகளை எதிர்பர்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அழுத்தமான பாத்திரத்தில் திரும்பும்போது கதையின் ஆழகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here