‘புஷ்பா 2: தி ரூல்’ டீசர் தேதி அறிவிப்பு.. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..

0
119

‘Pushpa 2: The Rule’: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தின் வெற்றி உலக அளவில் இருந்து கிடைத்திருப்பதால், இந்த புஷாபா இரண்டாம் பாகமும் உலக அளவில் நடக்க கூடிய மாஃபியா குறித்து படமாக்கப்படுகிறது.

புஷ்பா முதல் பாகத்தின் கதை, இந்திய சந்தன மாஃபியா பகுதியில் மட்டுமே இருந்தது. ஆனால், புஷ்பா படத்திற்கு கிடைத்த வெற்றி, சர்வதேச அளவில் படம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அதன்படி புஷ்பா பாகம் இரண்டானது, உலக அளவில் அறியப்படும் சட்ட விரோதமான சிவப்பு மணல் வியாபாரம் குறித்து பேசவுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூனின் பிறந்த நாளான அன்று இந்த டீசர் வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here