ராஷ்மிகாவுக்கு பர்த்டே கிஃப்ட் கொடுத்த ‘புஷ்பா’ டீம்.. வெளியானது புதிய போஸ்டர்..!

0
133

HBD Rashmika: இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவருபவர் நடிகை ராஷ்மிகா. இவர் தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்து, அவர் தெலுங்கு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை இயக்குநர் உருவாக்கி வருகிறார்.

இந்த டீசர் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்திற்காக நடிகை ராஷ்மிகா ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த நிலையில் இன்று தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ராஷ்மிகாவுக்கு பர்த்டே கிஃப்ட்டாக புஷ்பா படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்பபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here