‘புஷ்பா 2’ – நாளை டீசர் ரிலீஸ் ஆகுமா?.. படக்குழு வெளியிட்ட புதிய தகவல்..!

0
85

‘Pushpa 2: The Rule’: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தின் வெற்றி உலக அளவில் இருந்து கிடைத்திருப்பதால், இந்த புஷாபா இரண்டாம் பாகமும் உலக அளவில் நடக்க கூடிய மாஃபியா குறித்து படமாக்கப்படுகிறது.

புஷ்பா முதல் பாகத்தின் கதை, இந்திய சந்தன மாஃபியா பகுதியில் மட்டுமே இருந்தது. ஆனால், புஷ்பா படத்திற்கு கிடைத்த வெற்றி, சர்வதேச அளவில் படம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அதன்படி புஷ்பா பாகம் இரண்டானது, உலக அளவில் அறியப்படும் சட்ட விரோதமான சிவப்பு மணல் வியாபாரம் குறித்து பேசவுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து, ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

அல்லு அர்ஜூனின் பிறந்த நாளான அன்று இந்த டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் டீசர் எடிட் முடிவடைந்ததாக கூறி படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆல் செட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here