வெறித்தனமான ஆட்டத்தில் கடத்தல் மன்னன் புஷ்பா.. பர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா?..

0
74

‘Pushpa 2: The Rule’: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தின் வெற்றி உலக அளவில் இருந்து கிடைத்திருப்பதால், இந்த புஷாபா இரண்டாம் பாகமும் உலக அளவில் நடக்க கூடிய மாஃபியா குறித்து படமாக்கப்படுகிறது.

புஷ்பா முதல் பாகத்தின் கதை, இந்திய சந்தன மாஃபியா பகுதியில் மட்டுமே இருந்தது. ஆனால், புஷ்பா படத்திற்கு கிடைத்த வெற்றி, சர்வதேச அளவில் படம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அதன்படி புஷ்பா பாகம் இரண்டானது, உலக அளவில் அறியப்படும் சட்ட விரோதமான சிவப்பு மணல் வியாபாரம் குறித்து பேசவுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்த முன்னிட்டு ஏப்ரல் 8ஆம் தேதி ரிலீஸானது.

மாஸாக வெளியான இந்த டீசருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘புஷ்பா 2’ படத்தின் திரையரங்கு உரிமம் வட இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் 275 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ நாளை மாலை 4:05 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here