‘Inimel Delulu is the New Solulu’ என்னாவா இருக்கும்?.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

0
110

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். முன்னதாக ஹாசன் சகோதரர்கள் (Hassan Brothers) என பெயருடன் 1981ஆம் ஆண்டு, ‘ராஜ பார்வை’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

அதன் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை புதிய படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் புதிய படங்களையும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த நிறுவனம் தனது ‘X’ தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும், சுருதிஹாசனும் நேருக்கு நேர் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், ‘Inimel Delulu is the New Solulu’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், இது புதிய படத்திற்கான அப்டேட்டா? அல்லது சுருதிஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் புதிய பாடலை இயக்க இருக்குவதற்கான அப்டேட்டா? என தெரியாமல் குழம்பிபோய் உள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here