‘ராயன்’ படத்தின் புதிய அப்டேட்.. காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

0
96

‘Raayan Update’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் புகைப்படங்கள் வெளியானது. அதன்படி, இந்த படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘ராயன்’ படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here