மரண வெயிட்டிங்க்..! எந்த காம்போவை பார்க்க ஆவலாக இருக்கீங்க?..

0
117

Raayan Update : தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘ராயன்’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் ஆகியோரது புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எந்த காம்போவை ஸ்கிரீன்ல பார்க்க ஆவலாக உள்ளீர்கள்?.. மரண வெயிட்டிங்” என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here