இரண்டாவது திருமணம் எப்போது?.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரச்சித்தா..!

0
192

Rachitha Mahalakshmi: சின்னத்திரை சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட துறையிலும் பிரபலமானவர்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிரிந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே ரச்சிதா பிரபல இயக்குநர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடுப்பான ரச்சித்தா, முன்னதாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்வதாக கூறி, தனது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போட்டோக்களை பகிர்ந்தார். மேலும், அதில் “கண்ட விஷயத்தை வைரல் ஆக்குவதற்கு பதில் இதை ஆக்குங்கள்” என கூறியிருந்தார்.

தொடர்ந்து, ரச்சித்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், தற்போது அவர் புதிய குட் நியூஸ் ஒன்றை தனது இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.

அதன்படி, ரச்சித்தா RM கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, “இந்த தினத்தில் RM கிரியேஷன்ஸ் என்கிற பட தயாரிப்பு நிறுவனத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் ஆனந்தம் அடைகிறேன். https://www.instagram.com/p/C2hpBqBP2pv/

கனவுகளோடு இருக்கும் பட இயக்குனர்களின் கதையை கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களது கனவுகளை நினைவாக்க நாங்கள் இருக்கிறோம். லட்சியத்தோடு படம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடும் இருப்பவர்களின் கதைகளையும் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘எனது செயல் மாற்றத்தை தூண்டியுள்ளது’ – நடிகை ரஞ்சனா நாச்சியார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here