நண்பரின் சாய்பாபா கோயிலுக்குச் சென்ற லாரன்ஸ்.. வைரல் வீடியோ..!

0
66

Raghava Lawrence: சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக புதிதாக சாய் பாபா கோயில் கட்டியுள்ளார். சமீபத்தில் இந்த கோயிலில் நடிகர் விஜய் மற்றும் ஷோபா ஆகியோர் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோயிலுக்கு நடிகர் லாரன்ஸ் இன்று சென்றிருந்தார். அப்போது, கோயில் வாயிலில் நின்றிருந்த ஷோபாவைப் பார்த்த நடிகர் லாரன்சை உடனடியாக அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்திற்குள் சென்ற நடிகர் ராகவா லாரன்ஸ், ஷோபாவுடன் சென்று கோயில் முழுக்க சுற்றிப் பார்த்துவிட்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இருவரு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் லாரன்ஸ் இதுகுறித்து தனது ‘X’ தளத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நண்பர் விஜய்யின் சாய்பாபா கோயிலுக்கு அவரது தாய் ஷோபாவுடன் சென்றேன்.

நான் என் ராகவேந்திரர் சுவாமி கோயிலை கட்டியபோது, அங்கு ஷோபா வந்திருந்தார். தற்போது அவருடைய கோயிலுக்கு நான் சென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கோயிலை கட்டிய நண்பர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here