Raghava Lawrence: இயக்குநர் அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘படைதலைவன்’. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டது.
முன்னதாக கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சென்ற லாரன்ஸிடம், சண்முகபாண்டியனை பார்த்துக்கொள்ளுங்கள் என பிரேமலதாவின் தங்கை கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவில், “நிறைய ஹீரோக்கள் நடிக்கிற படத்துல வந்து விஜயகாந்த் சார், கெஸ்ட் ரோல் பண்ணுவாரு, பைட் பண்ணுவாரு, சாங் பண்ணுவாரு.
மத்தவங்களை வளர்த்து விடறதுல அவருக்கு ஒரு சந்தோஷம். நானும் அவர் கூட ‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்தில் வரும் ‘மூக்குத்தி முத்தழகு’ பாடலுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கேன். எனக்கு நிறைய சப்போர்ட்டா இருந்தாரு.
அதேபோல, அவர் பையன் படம் ரிலீஸ் ஆகும் போது இறங்கி நான் பப்ளிசிட்டி செய்யலாம்னு இருக்கேன். அந்த படக்குழுவினர் ஒத்துக்கிட்டாங்கன்னா, சண்முக பாண்டியன் படத்தில் நான் பைட்டோ, சீனோ, சாங்கோ, கெஸ்ட் ரோல்ல பண்ணலாம்னு இருக்கேன்.
யாராவது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்க, சண்முக பாண்டியன் தம்பி கூட சேர்ந்து நான் நடிக்க தயாரா இருக்கேன். அவங்க குடும்பத்துக்கு நாம ஏதாவது பண்ணணும்னா இதுதான் பண்ணணும்னு தோணிச்சி, அதான் உங்க கூட ஷேர் பண்றேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சண்முகபாண்டியன் நடித்துவரும் ‘படைதலைவன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.