‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

0
119

‘Raghuthatha’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் பிரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் டீசர் வெளியாகவுள்ள அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்தப் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ‘ஹோம்பலே’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், ஒரு போர்டில் ஹிந்தியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது அதனை நடிகை கீர்த்தி சுரேஷ் கோபகாம வந்த அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதியை படக்குழு வெளியிட்டது. இது குறித்து ‘ஹோம்பலே’ தயாரிப்பு நிறுவனம் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கயல்விழியின் நகைச்சுவை நிறைந்த, உல்லாச உலகத்தை காணத் தயாராகுங்கள். நாளை (ஜன.12) காலை 9 மணிக்கு ‘ரகுதாத்தா’ படத்தின் டீசர் வெளியீடு, காணத்தவறாதீர்கள்!’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘Mission Chapter 1’ படத்தின் ஸ்நீக் பீக் வெளியானது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here