‘லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லுவோம்’ – அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்து..!

0
82

Actor Rajinikanth: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவுள்ளதாக கூறியிருக்கிறார்.

விஜய்யின் இந்த அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வரவேற்றாலும், சிலர் விஜய்யை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி தொடங்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்’ என கூறிவிட்டுச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here