நேருக்கு நேர் மோதும் ரஜினி – விஜய்..!

0
155

Vijay – Rajini: சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினி தான் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இடையில் இந்த படத்திற்காக விஜய் போட்டி போடுவதாக சலசலப்பு ஏற்பட்டது. விஜய்யும், ரஜினியும் மாறி மாறி தங்களது பட விழாவில் ஒருவரை ஒவருர் பேசியது ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது புதிய போட்டி தொடங்கியுள்ளது. அதன்படி, இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதே நாளில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘The Greatest of All Time’ படமும் ரிலீஸாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தநேரத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு விஜய்யின் ‛கோட்’ படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரப்போவதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மீண்டும் சோசியல் மீடியாவில் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கிடையே வார்த்தை மோதல் உருவாகி சலசலப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here