அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..! க்யூட் ரஜினி ரசிகரின் வைரல் வீடியோ..!

0
402

நடிகர் ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இருந்தபோதிலும் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் பேசப்பட்டார்.

இதனால், கே.பாலசந்தரிடம் நன்மதிப்பைப் பெற்ற ரஜினி, தொடர்ந்து அவரது படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். முதலில் கேரக்டர் ரோல் பிறகு வில்லன் என நடித்து வந்த ரஜினிக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனது சிறப்பான நடிப்பு, ஸ்டைல் போன்றவற்றால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தற்போது வரை ஹீரோவாகா நடித்து வருகிறார். 1975ஆம் ஆண்டி சினிமா பயணத்தை தொடங்கிய ரஜினி இன்னும் சில நாட்களில் தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தை தொடவுள்ளனர்.

தற்போது வரை தனது ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்பார்கள். அதனை வெளிப்படுத்தும் விதமாக, தற்போது குட்டி ரஜினி ரசிகரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களி பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகனிடம், ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘லால் சலாம்’ எந்த படத்திற்கு போகலாம் என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், லால் சலாம் படத்திற்கு போகலாம் என கூறி தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வரும் பாடலில், ‘உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன், உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்’ என்ற வரிகள் வரும்.

அதற்கு எடுத்துக்காட்டாக இந்த குட்டி ரஜினி ரசிகரின் வீடியோ அமைந்துள்ளது. அந்த வகையில் பாடலில் வருவதுபோல, நடிகர் ரஜினி, நான்கு தலைமுறைகளை கடந்தும் இந்த சிறுவனின் மனதில் நிற்கிறார் என்பதே நிதர்சனம். இந்த க்யூட் ரசிகரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘தலைவர் 172’ படத்தை மாரிசெல்வராஜ் இயக்கவுள்ளனர்.

தொடர்ந்து, ஜெயிலர் பார்ட் 2 எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பல படங்களை கையில் வைத்திருக்கும் ரஜினிகாந்த்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘Ayalaan Making Video’: ‘உங்களது கடினமான உழைப்பிற்கு வாழ்த்துகள்’ – ரசிகர்கள் கமெண்ட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here