‘வேட்டையன்’ படப்பிடிப்பு.. ரஜினியைக் காண குவிந்த ரசிகர்கள்..

0
70

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார்.

அப்போது ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். தொடர்ந்து, படப்பிடிப்பு முடிந்த பின் ரஜினி கேரவன் செல்லும் போதும், மீண்டும் விடுதிக்குத் திரும்பும் போதும் ரசிகர்களைப் பார்த்து ரஜினி, கை அசைத்தபடி சென்றார். தொடர்ந்து, இன்றும் நடிகர் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் காவல் துறையினர் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெளியானது ‘ரகு தாத்தா’ டீசர்… ரசிகர்கள் வரவேற்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here