‘RajiniKanth’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய படத்தை இயக்கவுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்ததை தொடர்ந்து இப்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்காக ராகவா லாரன்ஸ் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ மற்றும் ‘விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் அல்லது இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.